வஞ்சம்

நெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே
எங்கும் பொங்கும் வஞ்சம்
எம்மையும் சூழும்
அன்று  ம் நெஞ்சமும்
வலியால் வாடும்
நாம் விதைத்த வஞ்சம்
அவர்கள் நெஞ்சத்தையும்
பாடாய் படுத்தியதை
உணரும்    நெஞ்சம்
வஞ்சம் கூறாது வாழும் .

6 பதில்கள் to “வஞ்சம்”

  1. கவிதை நன்றாக இருக்கின்றது, வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ்.
    நன்றியுடன்
    உங்கள் சுவிஸ் ஸ்ரீ

  2. வணக்கம் கவிநாயகனே! என்ன ஆனது உங்களுக்கு ரொம்ப நாள்லா உங்களை காணமுடியல்லை, நான் நினைத்துக்கொண்டேன் தூறல் நின்று போய்விட்டது என்று. இப்போதாவது மீண்டும் மழை பொழிந்து
    உள்ளதே என்ன கொடுமை ஐயா இது ??? அடிக்கடி ஊர்வலம் வந்து போகலாமே? இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    வாழ்த்துகளுடன்
    உங்க ரசிகை
    தலைத்தீவாள் (ஜனனி)

  3. “எங்கும் பொங்கும் வஞ்சம்
    எம்மையும் சூழும்
    அன்று நம் நெஞ்சமும்
    வலியால் வாடும்
    நாம் விதைத்த வஞ்சம்……….”இவ் வரிகள் “தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் “என்ற பட்டினத்தார் கூற்றுக்கமைய நிற்கிறது.நல்லது மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

    ப்ரியமுடன்,
    சிரபுரத்தான்.

aruleesan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி