ஜூலை 18, 2018 க்கான தொகுப்பு

வடை

Posted in Uncategorized on ஜூலை 18, 2018 by aruleesan

பாட்டி சுட்டவடை
எங்கேதான் போச்சு
காக்கை அதன் அலகால்
களவாடிபோச்சு
தூக்கிகொண்டு போன
வடை என்னதான் ஆச்சு
மரக்கிளை அமர்ந்து
காக்கை உண்ணப் போச்சு
இளைப்பாறும் நரிக்கு
வடை மணந்தாச்சு
முகந்து கண்டவடையை
முழுதாய் உண்ண எண்ணி
ககாக்கை பார்த்து
கான கருங்குயிலே
கவி ஒன்று தாரும்
உன் கான மளழயில்
மூழ்க வென்று கூற
தந்திரத்தின் கூற்றுக்கு
காக்கை ஏமாந்து பாட
வடை வாய்தவற
நரி வாயில் வடை
இடமாறிப்போச்சு.

பளைய பாடலில் பிறந்தது
அருள்ஈசன்

Advertisements