பணம்

 

 

 

 

பண்டை மாற்றை
மறக்க வைத்த பணம்
பைநிறைந்தால்
குணம் மாற்றும் தினம்
பணம் பாசத்தை
விலை பேசும் குணம்
இது கஞ்சத்தால்
உருவான தனம்
பணம் ஏழைக்கு
எட்டாத பழம்
எஜமானின்
பெட்டியில்கனம்
இதை வாடைக்கு
விட்டவரின் மனம்
வரும் குட்டி
என்னுவதே தினம்
வாங்கியவர்
திருப்பவில்லை
என்றால் பணம்
வன்முறைக்கு
வழி சமைத்த பணம்
பத்தையும்
உண்டு பன்னும் பணம்
பார் எங்கும்
உலுக்குதையோ தினம் !
அளவில்லா
ஆசைக்கு பணம்
அறிவையும்
விலை பேசும் குணம்.
நாட்டுக்கு நாடு
வேறுபட்ட பணம்
நாளுக்கு நாள்
உலக சந்தையில்
மாறும் தரம்
அன்று வளம்
சுரண்டிய
நாடுகளின் தனம்
வல்லரசு நாம்
என்ற பதம்
இன்று நாட்டுக்கு
நாடு உதவும் பணம்
நம் நாடுகளை
சுரண்டிவந்த பணம்
அனத்தம் என்றும்
அவலம் என்றும்
உலகத்தோர்
வாரிவிடும் பணம்
பெரும் முதலுக்காய்
அவர் செய்யும்
மூலதனம்.
பல உண்மைகள்
நான் எழுதிய நேரம்
மின்சார கட்டணமாய்
உயருதையோ
என்பணம்… என்பணம் ……..

ஒரு பதில் -க்கு “பணம்”

  1. ப்ரியமுள்ள அருளீசனுக்கு, பணத்திற்குரிய அத்துணை பண்புகளையும் விளக்கிக் கவி வரைந்துள்ளீர்கள்.மிக அருமை.ஜதார்த்தமான வரிகள், மனதில் கலையாத வடிவம் பெற்றுள்ளன.
    ப்ரியமுடன்,
    சிரபுரத்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: