கொடிய கொடூரம் எது ???

மருத்துவத்தின் ஆய்வில்

வதைபடும் பிராணிகளின்

வன் கொடுமை கண்டு

தடை போடக் கேட்கும்

உலகம் சித்திரவதை

கூடமாகி வகைதொகை இன்றி

வதைபடும் மக்களை காக்க

இயலாதது ஏன் ???

முயலையும் ,எலியையும்

தவறவைக்க எண்ணும் -உலகம்

மனிதம் படும் அவலத்தை

காணவில்லையோ !!!

கையில் வெண்ணை இருக்க

நெய்யுக்கு அலைகிறது போலும்

ஆதாரம் 200   பிரதிகள் இருப்பதாக

மனித உரிமை மையம்

கூறுகின்ற போதும்

பன்னிரண்டு மாதங்கள்

பறந்தோடிய நிலையிலும்

கேட்பாரும் இல்லை

மீட்பாரும் இல்லை

என்ற நிலை தொடர்கிறது

அடுத்துவரும் ஆண்டிற்குள்

வயோதிபரும் ,

வாழ் இழந்த பெண்களும் தான்

மிஞ்சுவார்கள்

அங்கு நடப்பது இனவெறிதான்

உலகம் இதை எப்போது

உணரும் .

2 பதில்கள் to “கொடிய கொடூரம் எது ???”

  1. வணக்கம்
    உங்கள் கவிதை மிகவும் நல்ல இருக்கு
    ஆனால் இன்னும் கொஞ்சம் நல்ல நிறைவாக
    சொல்லி இருக்கலாம் என்பது என்னோட விருப்பம் .
    வாழ்த்துக்கள் நலம்பெற ………

    ஜனனி

  2. வணக்கம் ஜனனி ,வாழ்த்துக்களுக்கும்
    உங்கள் வருகைக்கும்.
    மேன்மேலும் எனது வளர்ச்சிக்கு
    உங்கள் ஆதங்கமும் ஆசியும் நெறிப்படுத்த
    வாருங்கள் வளர்த்தெடுங்கள்

    நன்றி

janani -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி