தீராதோ அவலம்

பஞ்சம் தீர்த்த பூமியதில்
வஞ்சம் கொண்ட காந்தியமும்
புத்தன் போதிக்காத இனவெறியும்
சேர்ந்து நடத்திய அரக்க தாண்டவத்தால்
பொன்னானபூமியதில் பேரவலம் சூழ்ந்தது .
நாட்கள் எண்ணும் முன்பே
கொத்து கொத்தாக நம்மவரின்
உயிரும் உறவும் பிரிந்து
உளவுறனும் இழந்து
செய்வது அறியாது தத்தளித்து
உலகமே எம்மை காப்பாற்று- என்று
உரக்க கதறி நின்றோம்
உலகமும் கண்டுகொள்ளாது-நிற்க
எம்மையாரும் காக்கவில்லை.
எண்ணுக்கு அடங்காது
எண்ணிக்கையும் தெரியாதவாறு
எச்சங்களும் அளித்து ஒழிக்கப்பட்டு
தருமம் துலைந்த
புதிய புத்தசிலைகளும்
புதிய பெயர்பலகைகளும் புறப்பட்டு
சிங்களக்குடியிருப்புகளும்
ஆங்காங்கு தோன்றி நிற்க
எங்கள்தேசம் மாற்றம் பெற்று
ஒருஇனத்தின் அழிவிலும்
அடக்கு முறையிலும் நடப்பது
இனவாதம் தான் சான்று பயிலும்
சாட்சியங்களும் விழாக்களும்
நாளுக்குநாள் அங்கே
ஒருநேர உணவும்
ஓரங்கட்டிய இடமும்
கலாச்சார சீரழிவும்
காமுகரும்
கட்டவிழ்த்த காடைத்தனமும்
வெட்ட வெளி நிலத்தில்
வேகவைக்கும் முகாமில்
திட்டமிட்ட சிறையால்
வன்னி நிலத்தில் முகாங்களும்
வதைமுகாங்களும்
எண்ணில் அடங்கவில்லை
இன்றும்தான்  விடிவும் இல்லை
எவர் எம்மை காப்பார்
மீட்பராய் யாரும் வந்துதித்து
காக்கவேண்டும் எம்மினத்தை  .

2 பதில்கள் -க்கு “தீராதோ அவலம்”

 1. வணக்கம்
  அருமை அருமையிலும் அருமை
  உங்கள் இந்த வரிகள். சொல்லான
  துன்பம் எம் இனம் பட்ட போதும்
  கண் மூடி இருந்த பாரதமே
  இப்போ எங்கு இருக்கிறாய்?
  இன்னுமா உன்கண்கள் கட்டி
  இருகின்றன????
  பாரதமே நீ புரிந்து கொண்ட
  தமிழ் இனம் விழித்துக்கொள்ளும்..
  நன்றி உங்க கவிதைக்கு வாழ்க
  வாழ்க உங்கள் பணி வாழ்க தமிழ்.
  ஜனனி

 2. வணக்கம் ஜெனனி வாழ்த்துக்களுக்கு
  எனது உள்ளக்குமுறளுக்கு
  உதிரும் மை தெளித்தேன்
  இதற்கு உயிர் இருக்கிறதா
  இல்லையா என்பதை
  உங்கள் போன்ற
  சுவை உடையவர்கள் மூலம்
  தெரிந்து கொள்ளமுடியும்
  எனவே உங்கள் கையில் எங்களின் வளர்சி .

  நீங்கள் தலைப்புத்தந்தால்
  இயன்றவரை முயற்ச்சிசெய்வேன் .
  தாமத்துக்கு மன்னிக்கவும்
  காரணம் வேலை பழுவே

  நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: