எங்கள் முற்றத்து முருங்கை மரம்

நித்தம் எழுந்தவுடன்
நிதர்சனம் தரும் அந்த
முற்றத்து முருங்கை
மரம்மண்ணை விட்டு
இடம்பெயர்ந்தும்
மனதைவிட்டு போகவில்லை
நாம் சோறு அற்றுநின்றபோது
சொத்தாகி உயிர் பிடித்தாய்
நாங்கள் இறைத்த நீருக்கு
நலிந்து உழைத்த உன்னை
நாம் மறந்து ஒடவேன்றோ
சிங்களத்தின் படை வந்தான்
திசைமாறி ஓடிவிட்டோம்
தினம் ஒருக்கால் உன்நினைப்பு
மனதலைக்கு வந்துபோகும்
மதியம் ஒன்று உண்டு அதனால்
அருங்கோடைஎன்றாலும்
அங்கொன்று இங்கொன்றாய்
காய்க்காமல் விட்டதுண்டோ
பெத்து வீட்டு பத்தியதுக்காய்
பெருந்தேடல் தேடி வருவார்
வந்தவரின் மனங்குளிர
மருந்துபோல் உதவி நிற்பாய்
வாங்கி அவர் செல்லும்போது
வாய் ஓயாது நன்றி சொல்வார்
இலை பறித்து வறுத்து உண்டால்
என்னசுவை எனி எப்போகான்ப்து
ஏங்கி நிர்கும் உன் எஜமான்.நன்றியுடன்
அருளீசன்.

2 பதில்கள் -க்கு “எங்கள் முற்றத்து முருங்கை மரம்”

  1. நாட்கள் சென்றாலும் தாய்மண் உறவு நம்மை விட்டுப் போகாது…மேலும் மேலும் நெருங்கியே வரும் உங்கள் உண்மை வரிகளுக்கு வாழ்த்துகள். எனக்கு எழுதிய வரிகளுக்கும் நன்றி. வாழ்க! வளர்கு!

  2. உங்கள் உணர்வுகளுக்கு காலம் இடம்தர வேண்டும்.உங்கள் பயணத்தின் ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.மேலும் பயணம் தொடர இறையருளை வேண்டி நிற்கும்,
    ப்ரியமுடன்,
    சிவபுரத்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: